×

சாலையோர வனப்பகுதியில் நடமாடிய 3 கரடிகள்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கரடிகள் நடமாடுகின்றன. வனப்பகுதியில் உள்ள சாலைகளிலும் அவ்வப்போது கரடிகள் நடமாடுவது வழக்கம். இந்த நிலையில் ஆசனூர் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 கரடிகள் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள வனப்பகுதியில் உலா வந்தன. அப்போது அவ்வழியே காரில் சென்ற பயணிகள் தங்களது செல்போனில் கரடிகள் நடமாட்டத்தை வீடியோவாக பதிவு செய்து வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது கரடிகள் நடமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சாலையில் வாகனங்களில் செல்லும் பயணிகள் சிறுத்தை,புலி, யானை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடுவதை கண்டால் அருகே சென்று செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க கூடாது என அறிவுறுத்தி உள்ளனர்.

The post சாலையோர வனப்பகுதியில் நடமாடிய 3 கரடிகள்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,Sathyamangalam Tiger Reserve ,Asanur ,Mysore National Highway ,Dinakaran ,
× RELATED பண்ணாரி வனப்பகுதியில் உடல்நலம்...