×

வேலூர் மாநகராட்சியில் நகரை அழகுபடுத்த வைக்கப்பட்டது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்து உடைந்து கிடக்கும் நடைபாதை ஸ்டீல் தடுப்புகள்: கண்டு கொள்ளாததால் திருட்டு கலெக்டர் ஆய்வு செய்ய கோரிக்கை

வேலூர்: மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பலலட்சம் செலவில் நடைபாதையில் அமைக்கப்பட்ட ஸ்டீல் தடுப்புகள் உடைந்துள்ளது. அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் மர்ம ஆசாமிகள் திருடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மாநகரில் உள்ள சாலைகளின் இருபுறமும் பாதசாரிகள் நடந்து செல்வதற்கான நடைபாதையுடன் பல லட்சம் செலவில் ஸ்டீல் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை தரமான முறையில் ெபாருத்தாததால் பெரும்பாலான இடங்களில் வைக்கப்பட்ட தடுப்பு கம்பிகள் உடைந்து கீழே விழுந்து கிடக்கிறது. ஆனால் அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளவே இல்லை. வேலூர் ஆற்காடு சாலை, சத்துவாச்சாரி சிஎம்சி காலனியில் நடைபாதையில் அமைக்கப்பட்ட ஸ்டீல் தடுப்பு கம்பிகள், ஒரு மாதத்திற்கு மேலாக உடைந்து கிடக்கிறது. இதேபோல், மாநகரின் பல பகுதிகளில் நடைபாதையில் வைக்கப்பட்ட தடுப்பு வேலிகள் மாயமாகி உள்ளது. . தங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாததுபோல் மாதக்கணக்கில் விட்டுவிட்டதால் பல இடங்களில் உடைந்து கிடந்த ஸ்டீல் தடுப்புகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர்.

அப்போதும் யாரும் கண்டு கொள்ளாததால் தற்போது சமூக விரோதிகளும் உடைத்து திருடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் செலவு செய்து, நகரை அழகுபடுத்தும் வகையில் நடைபாதையில் அமைக்கப்பட்ட தடுப்பு வேலிகள் முறையாக அமைக்கப்படாததால், திருட்டு போய் உள்ளது. மக்கள் வரிப்பணம் இதில் வீணடிக்கப்பட்டுள்ளதால் இதுகுறித்து புதிதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்து, உடைந்து காணப்படும் தடுப்பு கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதுடன் தரமற்ற முறையில் பணி செய்த ஒப்பந்ததாரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வேலூர் மாநகராட்சியில் நகரை அழகுபடுத்த வைக்கப்பட்டது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்து உடைந்து கிடக்கும் நடைபாதை ஸ்டீல் தடுப்புகள்: கண்டு கொள்ளாததால் திருட்டு கலெக்டர் ஆய்வு செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vellore Corporation ,Vellore ,Smart ,Dinakaran ,
× RELATED தொரப்பாடி சிறை காவலர் குடியிருப்பு...