×

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணிகளை தலைமைக் கழகத்தில் இருந்து ஒருங்கிணைக்க திமுக சார்பில் வார் ரூம் அமைப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பாஜகவை வீழ்த்த 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி வருகின்றன. மக்களவை தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 2-வது வாரம் முதல் மே 2-வது வாரம் வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும் என அரசியல் வல்லுநர்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

இதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதிசெய்து, தொகுதி பங்கீட்டை முடிவு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தலைமைக் கழகத்தில் இருந்து ஒருங்கிணைக்க திமுக சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. தொகுதி பார்வையாளர்கள் ஒருங்கிணைப்பு, பூத் கமிட்டி,பரப்புரை மேற்பார்வைகளை திமுக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை மேற்கொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஊடக விவாத குழு, நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரை- திமுக துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின் தலைமையில் குழு

* சட்டக் குழு மற்றும் தேர்தல் ஆணையம்- திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி தலைமையில் குழு

* காவல்துறை புகார்கள், பாதுகாப்பு விஷயங்களுக்கு ஒரு குழு மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் குழுவும் அறிவிப்பு

* ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு வார் ரூம் அமைக்கப்படும் எனவும் திமுக தலைமை அறிவிப்பு

The post நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணிகளை தலைமைக் கழகத்தில் இருந்து ஒருங்கிணைக்க திமுக சார்பில் வார் ரூம் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Chennai ,India ,BJP ,India Alliance ,War Room Organisation ,Dinakaran ,
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...