×

அரியலூரில் தொழிற்சங்கங்கள் ரயில் மறியல் குறித்து தெருமுனை பிரசாரம்

அரியலூர்,பிப்.11:அரியலூர் அண்ணா சிலை மற்றும் இருசுகுட்டை பகுதியில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ரேசன் முறையை பலப்படுத்த வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். 100 நாட்கள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி ரூ.600 கூலி வழங்கிட வேண்டும். மோட்டார் வாகன திருத்தச் சட்டம், மின்சார விநியோக சட்டத் திருத்தங்களை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஒன்றிய தொழிற்சங்கங்கள்,

ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பிப்.16 அன்று மாநில அளவில் நடைபெறும் ரயில் நிறுத்த போராட்டத்தையொட்டி அரியலூரில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து ஒன்றிய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் தெருமுனை பிரசாரம் நேற்று நடைபெற்றது. தெருமுனை பிரசாரத்துக்கு ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் தண்டபாணி, தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் மகேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் துரைசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.

The post அரியலூரில் தொழிற்சங்கங்கள் ரயில் மறியல் குறித்து தெருமுனை பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Unions ,Ariyalur ,Anna ,idol ,Irusukuttai ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...