×

அலங்காநல்லூர் அருகே பாதை வசதி கேட்டு சாலைமறியல்

 

அலங்காநல்லூர், பிப். 11: அலங்காநல்லூர் அருகே பாதை வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லணை ஊராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் நடைபாதை இல்லாமல் தவித்து வந்தனர். இதனையடுத்து நேற்றைய தினம் தனிச்சியம் அலங்காநல்லூர் சாலையில் முன்னறிவிப்பின்றி சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சமயநல்லூர் டிஎஸ்பி பாலசுந்தரம் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் ஊராட்சி மன்ற தலைவர் சேது சீனிவாசன், நிலஎடுப்பு தாசில்தார் திருநாவுக்கரசு உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் சமயநல்லூர் டிஎஸ்பி பாலசுந்தரம் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பாதை வசதி தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அலங்காநல்லூர் தனிச்சியம் சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post அலங்காநல்லூர் அருகே பாதை வசதி கேட்டு சாலைமறியல் appeared first on Dinakaran.

Tags : Alanganallur ,Gandhiravidar Colony ,Grave Guard ,Alanganallur, Madurai district ,Dinakaran ,
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளர், கட்சி...