×

வாகன உரிமையாளர்கள் சங்க முதலாம் ஆண்டு நிறைவு விழா

புழல்: புழல் அடுத்த சூரப்பட்டு பகுதியில் உள்ள கலாம் மக்கள் மன்றம் மற்றும் தனியார் பள்ளி வாகன உரிமையாளர்கள் சங்கம் இணைந்து, முதலாம் ஆண்டு நிறைவு விழா சூரப்பட்டு தனியார் பள்ளி அருகே நேற்று நடைபெற்றது. வாகன உரிமையாளர்கள் சங்க தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார்.நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், சுதாகர், ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கலாம் மக்கள் மன்ற நிர்வாகிகள் ராமமூர்த்தி, சதீஷ், துரை ஆகியோர் பங்கேற்று, 100க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.நிகழ்ச்சியில், ஸ்ரீதர், மெட்ரோ ராஜன், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post வாகன உரிமையாளர்கள் சங்க முதலாம் ஆண்டு நிறைவு விழா appeared first on Dinakaran.

Tags : Vehicle Owners Association ,Puzhal ,Kalam People's Forum and Private School Vehicle Owners' Association ,Surapatu ,Surapatu Private School ,President… ,Dinakaran ,
× RELATED புழல் சிறைச்சாலையில் செல்போன் பறிமுதல்