×

கும்மிடிப்பூண்டி அருகே ஆட்டோவில் கடத்தி வந்த 350 கிலோ குட்கா பறிமுதல்: ஓட்டுனர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம் கூட்டு சாலையில் போலீசாரின் வாகன சோதனையின் போது ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 350 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் சாலை கூட்டு சாலையில் சிப்காட் போலீசார் இரவு பகலாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக குளிர்பானங்களை ஏற்றி வந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட ஷேர் ஆட்டோவை மடக்கி விசாரணை மேற்கொண்டதில் ஆட்டோவின் ஓட்டுநர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், ஷேர் ஆட்டோவில் இருந்த குளிர்பானங்களை இறக்கி சோதனை செய்தபோது குளிர்பானங்களுக்கு இடையே 18 மூட்டைகளில் சுமார் 350 கிலோ எடை கொண்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் ஆட்டோவை சிப்காட் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பூதூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேஷை(39) என்பதும், ஆந்திராவில் இருந்து தமிழக எல்லை பகுதியில் விற்பதற்காக கடத்தி வந்ததாக தெரிவித்தார்.இதையடுத்து வெங்கடேஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post கும்மிடிப்பூண்டி அருகே ஆட்டோவில் கடத்தி வந்த 350 கிலோ குட்கா பறிமுதல்: ஓட்டுனர் கைது appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Pethikuppam ,Thiruvallur district ,Pethikubpam road ,Dinakaran ,
× RELATED கும்மிடிப்பூண்டி சிப்காட்...