×

கும்மிடிப்பூண்டி அருகே டீ குடிக்கிற ‘கேப்’ல 8 சவரன் நகை போச்சு


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் கூட்டு சாலை பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ்(39). இவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் ஊருக்கு சென்ற நிலையில், நேற்று காலை 8 மணியளவில் யுவராஜ் பஜார் விதிக்கு சென்றார். அங்கு டீ குடித்துவிட்டு சிறிது நேரத்தில் வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது 8 சவரன் நகை, 2000 ரூபாய் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

இது குறித்து யுவராஜ் கவரப்பேட்டை காவல் நிலையத்துக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை கண்டுபிடிக்க அருகே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்து வருகின்றனர். பட்டப்பகலில் டீ குடிக்கிற ‘கேப்’ல நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post கும்மிடிப்பூண்டி அருகே டீ குடிக்கிற ‘கேப்’ல 8 சவரன் நகை போச்சு appeared first on Dinakaran.

Tags : 8 Sawaran ,Kummidipoondi ,Yuvraj ,Thachur ,Vidhi Bazaar ,
× RELATED இன்னொரு முறை பாஜ ஜெயித்தால் தேர்தல்...