×

ஊத்துக்கோட்டை அருகே இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி: புதிதாக கட்ட கோரிக்கை


ஊத்துக்கோட்டை: அத்திவாக்கம் கிராமத்தில் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை அகற்றி புதிய தொட்டி கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம் அத்திவாக்கம் கிராமத்தில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு கிராம சாலையோரத்தில் 35 வருடங்களுக்கு முன்பு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த குடிநீர் தொட்டியிலிருந்து அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இந்த குடிநீர் தொட்டியின் தூண்களும், அடிப்பகுதியில் சிமெண்ட் சிலாப்புகள் உடைந்து கம்பிகள் வெளியே தெரிந்து காணப்படுகிறது. பழுதடைந்த இந்த பழைய குடிநீர் தொட்டி எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலை உள்ளது. இந்நிலையில் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டி கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post ஊத்துக்கோட்டை அருகே இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி: புதிதாக கட்ட கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Uthukottai ,Uthukkottai ,Atthivakkam ,Ellapuram ,Oothukottai ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அரசு...