×

அறக்கட்டளை பண மோசடி புகார் சல்மான் குர்ஷித் மனைவிக்கு ஈடி சம்மன்

லக்னோ: உத்தரபிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர், ஒன்றியத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் வௌியுறவுத்துறை, சட்டத்துறை அமைச்சராக சல்மான் குர்ஷித் பதவி வகித்து வந்தார். இவர் அங்கு அறக்கட்டளை நடத்தி வருகிறார். கடந்த 2009-10ம் ஆண்டில் சல்மான் குர்ஷித்தின் மனைவி லூயிஸ் குர்ஷித் அறக்கட்டளை தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். அப்போது அரசு நிதியில் ரூ.71 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த மோசடி தொடர்பான விசாரணைக்கு வரும் 15ம் தேதி லக்னோவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் லூயிஸ் குர்ஷித் நேரில் ஆஜராக வேண்டுமென அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

The post அறக்கட்டளை பண மோசடி புகார் சல்மான் குர்ஷித் மனைவிக்கு ஈடி சம்மன் appeared first on Dinakaran.

Tags : ED ,Salman Khurshid ,Lucknow ,Congress ,Uttar Pradesh ,Minister for Aviation and Law ,Union government ,Louise ,Dinakaran ,
× RELATED வெறுப்பை பரப்பும் வகையில் பேசியதாக...