×

மரைன் போலீசார் உறுதிமொழி ஏற்பு

தொண்டி: தொண்டி மரைன் போலீசார் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து உறுதிமொழி எடுத்தனர்.கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடற்கரை காவல் நிலையம் சார்பில் கடலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மரைன் போலீசார் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

நிகழ்ச்சிக்கு தொண்டி கடற்கரை காவல் நிலையசார்பு ஆய்வாளர் செல்வராஜ் தலைமை வகித்தார்.இதே போல் தொண்டி நடுநிலை பள்ளியில் போதை ஒழிப்பு மற்றும் மீனவ இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மரைன் எஸ்.ஐ அய்யனார், செல்வராஜ், நுண்ணறிவு பிரிவு காவலர் இளையராஜா, கண்ணன், பூவலிங்கம், பிரான்சிஸ், குமார் உட்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post மரைன் போலீசார் உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Marine Police ,Thondi ,Thondi Marine Police ,Day of Abolition of ,Marines Police ,Ramanathapuram District ,Thondi Beach Police Station ,Marine Police Station ,Dinakaran ,
× RELATED கோடையில் இதமான மழை