×

தேவகோட்டையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட தூத்துக்குடி சகோதரர்கள் கைது

தேவகோட்டை: தேவகோட்டையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சிலம்பணி சிதம்பர விநாயகர்கோவில் அருகே, காவலாளி சுப்பிரமணி வீட்டில் கடந்த 7ம் தேதி அதிகாலை ஓட்டைப் பிரித்து திருட முயற்சி நடந்தது. காவலாளி மனைவி சகுந்தலா விழித்துக் கொண்டு சத்தம் போட்டதால், திருடன் தப்பியோடினான். இதேபோல, தேவகோட்டை ரெகுநாதபுரத்தில் உள்ள பாண்டி முனீஸ்வரர் திருக்கோயிலில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடிச் சென்றனர்.

இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து தேவகோட்டை நகர் போலீசார் விசாரித்து வந்தனர். மேலும், கோயிலில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தபோது, இந்த திருட்டில் ஈடுபட்டது, தூத்துக்குடி மாவட்டம், பிரைன்டு நகர் பகுதியைச் சேர்ந்த பெத்தையா மகன் கார்த்திக், அவரது சகோதரர் வெள்ளைச்சாமி ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் பழைய சருகணி ரோட்டில் டூவீலருடன் நின்று கொண்டிருந்தபோது, போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும், இவர்கள் கன்னியாகுமரி, கரூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

The post தேவகோட்டையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட தூத்துக்குடி சகோதரர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Devakottai ,Thoothukudi district ,Subramani ,Chilampani Chidambara Vinayagar temple ,Devakottai, Sivagangai district ,
× RELATED தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே...