×

குளத்தை தூர்வாரும் போது சேற்றில் சிக்கித் தவித்த நாகாலாந்து பாஜக அமைச்சர்

நாகாலாந்து: குளத்தை தூர்வாரும் போது சேற்றில் சிக்கித் தவித்த நாகாலாந்து பாஜக அமைச்சரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நாகாலாந்து பாஜக மாநிலத் தலைவரும், சுற்றுலா மற்றும் உயர்கல்வி துறை அமைச்சருமான டெம்ஜென் இம்னா அலோங்கின், அவ்வப்போது வித்தியாசமான கெட்டப்பில் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் டெம்ஜென் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘இன்று நான் மிகப்பெரிய மீனாக மாறிவிட்டேன்’ என்று வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குளத்தில் குளித்துவிட்டு வெளியே வரும்போது சேற்றில் சிக்கிக் கொண்டார்.

அவரது பெரிய உருவத்தால், உடனடியாக அவரால் கரையில் ஏறமுடியவில்லை. அப்படியே குளத்தின் கரையில் படுத்துக் கொண்டார். அவரால் எழுந்திருக்கவும் முடியவில்லை. அவரது உதவியாளர்கள் அவரை தூக்கிவிட முயன்றனர். இருந்தாலும் தானே எழுந்து வருவதாக கூறி, அடுத்த சில நிமிடங்களில் எழுந்து நின்று கரையை அடைந்தார். கரைக்கு வந்தவுடன், தனது உதவியாளர்களிடம் ‘எனது நாற்காலி எங்கே?’ என்று கேட்டார். தொடர்ந்து நாற்காலியில் அமர்ந்து கொண்டு, குளத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரும் பணியை பார்வையிட்டார். அமைச்சர் சேற்றில் சிக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post குளத்தை தூர்வாரும் போது சேற்றில் சிக்கித் தவித்த நாகாலாந்து பாஜக அமைச்சர் appeared first on Dinakaran.

Tags : Nagaland ,BJP ,minister ,Demjen Imna Alongin ,Nagaland BJP ,state ,president ,higher education ,
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக கையெழுத்து பிரசாரம்