×

“தமிழக மீனவர்களை காப்பாற்று” என எம்பிக்கள் முழக்கம்.. அயோத்தி ராமர் கோவில் குறித்து தான் விவாதம் என சபாநாயகர் அறிவிப்பு: திமுக வெளிநடப்பு

டெல்லி : தமிழ்நாட்டு மீனவர்கள் நலனில் ஒன்றிய அரசு அக்கறை செலுத்தவில்லை என குற்றம்சாட்டி மக்களவையில் இருந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று மக்களவை கூடியதும் திமுக உறுப்பினர்கள் காப்பாற்று காப்பாற்று என்று முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அவைத் தலைவர் ஓம் பிர்லா நீங்கள் என்ன விவகாரத்தை எழுப்ப வேண்டும், எதற்காக இப்படி காப்பாற்றுங்கள் என்று கூறுகிறீர்கள் என்று கேட்ட போது, தமிழக மீனவர்களின் விவகாரத்தை முன்வைத்து எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர். தமிழக மீனவர்களை காப்பாற்று என்று அவையில் கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து பேசிய திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, “இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இதற்கு இன்னும் முறையான பதில் வரவில்லை. அவையை ஒத்திவைத்து விட்டு மீனவ பிரச்சனை தொடர்பாக விவாதிக்க வேண்டும்,”என்று கோரிக்கை வைத்தார். ஆனால் சபாநாயகர், இன்று பூஜ்ய நேரமும் இல்லை, கேள்வி நேரமும் இல்லை. எந்த விதமான ஒத்திவைப்பு தீர்மானமும் ஏற்கபடாது. ஏனென்றால் இன்று அயோத்தி ராமர் கோவில் தொடர்பாக வரலாற்று சிறப்பு மிக்க விவாதம் நடைபெறுகின்றது,”இவ்வாறு தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து விதியின் 193ன் கீழ் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோவில் மற்றும் ராமரின் பிராண பிரதிஷ்டை தொடர்பாக விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

The post “தமிழக மீனவர்களை காப்பாற்று” என எம்பிக்கள் முழக்கம்.. அயோத்தி ராமர் கோவில் குறித்து தான் விவாதம் என சபாநாயகர் அறிவிப்பு: திமுக வெளிநடப்பு appeared first on Dinakaran.

Tags : MBIKS' ,Speaker ,Ayodhi ,Delhi ,Kratamsatti ,MLAKAWA ,EU government ,Tamil Nadu ,Dimuka ,Ayodhi Ramar Temple: Dimuka Exodus ,
× RELATED ராகுல், ஓம்பிர்லா தொகுதிகளில் இன்று...