×

மேலூர், காரைக்குடி 4 வழிச்சாலை பணிக்காக விடப்பட்ட மணல் குவாரியில் விதிமீறல்: நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: மேலூர், காரைக்குடி 4 வழிச்சாலை பணிக்காக விடப்பட்ட மணல் குவாரியில் விதிமீறலில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. ஒப்பந்ததாரர் லட்சுமணன், விதிமுறைகளை மீறி 38,000 கியூபிக் கன மீட்டர் கிராவல் மண் எடுத்துள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலூர் வருவாய்த்துறை, கனிமவளத்துறை என அதிகாரிகளுக்கு தெரியாமல் முறைகேடு நடந்திருக்காது என நீதிபதி தெரிவித்த நிலையில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

The post மேலூர், காரைக்குடி 4 வழிச்சாலை பணிக்காக விடப்பட்ட மணல் குவாரியில் விதிமீறல்: நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : Melur, Karaikudi ,lane ,Madurai ,High Court ,Mellur, Karaikudi 4 lane ,Lakshmanan ,-lane ,Dinakaran ,
× RELATED மதுரை திருமங்கலம் அருகே விபத்தில் 4 பேர் பலி