×

சுற்றுலா பயணிகளை கவரும் போகன்வில்லா மலர்கள்

ஊட்டி : ஊட்டியில் இருந்து மசனகுடி செல்லும் சாலையில் கல்லட்டி பகுதியில் பூத்துள்ள போகன் வில்லா மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு மலர்கள் காணப்படுகிறது. சில மலர்கள் சாலையோரங்களில் மற்றும் வேலிகளில் பூத்துக் காணப்படும். குறிப்பாக போகன் வில்லா பல்வேறு குடியிருப்புகளின் வேலிகள் மற்றும் சாலையோரங்களில் அதிக அளவு பூத்துக் காணப்படும்.

இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்து காணப்படும் இந்த மலர்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது. ஊட்டியில் இருந்து மசனகுடி செல்லும் சாலையில் கல்லட்டி மலை பாதையில் பல்வேறு இடங்களிலும் இந்த போகன்வில்லா மலர்கள் பூத்துள்ளன.

இதனால் இவ்வழி தடத்தில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இந்த மலர்களை புகைப்படம் எடுத்துச் செல்வது மட்டுமின்றி அதன் அருகில் என்றும் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். பொதுவாக இந்த மலர்கள் பனிக்காலங்களில் பூக்கும். கல்லட்டி மலைப்பாதையில் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது இந்த போகன் வில்லா மலர்கள் பூத்துள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் என்று உள்ளூர் மக்களும் கண்டு ரசித்து செல்கின்றனர்.

The post சுற்றுலா பயணிகளை கவரும் போகன்வில்லா மலர்கள் appeared first on Dinakaran.

Tags : Bougainvillea ,Ooty ,Pogan Villa ,Kallati ,Masanagudi ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...