×

திருவண்ணாமலையில் காலை 9 மணிவரை நீடித்த கடும் பனியால் மக்கள் தவிப்பு

*வாகன ஓட்டிகள் அவதி

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் நேற்று காலை 9 மணிவரை நீடித்த கடும் பனியால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிப்பட்டனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழை ஓரளவு கைகொடுத்தது. ஆனாலும், பெரும்பாலான ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் முழுமையாக நிரம்பவில்லை. ஆண்டு சராசரி அளவைவிட மழை குறைந்திருந்த நிலையில், தற்போது கடும் பனியும், குளிரும் அதிகரித்திருக்கிறது. திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக வழக்கத்தைவிட கடுமையான பனியும், குளிருமான சூழ்நிலை காணப்படுகிறது.

அதன்படி, நேற்று அதிகாலையில் இருந்து காலை 9 மணி வரையிலும் நீடித்த கடும் பனியால், சாலையெங்கும் மேகமூட்டம் போல பனி சூழ்ந்து காணப்பட்டது. அதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றபோதும், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவில், பனிப்பொழிவு காணப்பட்டது.

அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று பனி மூட்டம் காணப்பட்டது. காலையில் கடும் பனி சூழ்ந்த நிலை இருந்தபோதும், பகலில் வெயிலில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post திருவண்ணாமலையில் காலை 9 மணிவரை நீடித்த கடும் பனியால் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Tiruvannamalai district ,Thiruvannamalai ,
× RELATED தேர்தல் பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது *...