×

தேனி கலெக்டர் வளாகத்தில் நுழைவுவாயில் கட்டும் பணி துவக்கம்

தேனி,பிப். 10: தேனி கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் வடபுதுபட்டி செல்லும் வழியில் இடிக்கப்பட்ட நுழைவுவாயில் மீண்டும் கட்டும் பணி துவங்கி உள்ளது. தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் கலெக்டர் பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ளது. இவ்வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கூட்டுறவு துறை இணை இயக்குனர் அலுவலகம், சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம். மாவட்ட விளையாட்டு மைதானம், ஆயுத படை மைதானம், பேரலீசார், ஆட்சியர் முகாம் அலுவலகம் மாவட்ட போலீஸ் எஸ்பி முகாம் அலுவலகம், டிஆர்ஓ முகாம் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் போலீஸ் குடியிருப்பு உள்ளது..

கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பெருந்திட்ட வளாகத்தின் வழியாக வடபுதுப்பட்டி செல்வதற்கான பிராதான தார்ச்சாலை உள்ளது. இச்சாலையின் வழியாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கனரக வாகனங்கள் சென்று வந்தன. இதில் தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகளும், வைகை ஆற்று படுகையில் இருந்து மணல் அள்ளி வரும் லாரிகளும் குவாரிகளில் இருந்து ஜல்லி ஏற்றி வரும் லாரிகளும் சாலைகளில் பயணித்தன.

இதனால் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு அலுவலகப் பணியாளர்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது இதனை தடுப்பதற்காக இச் சாலையில் வடபுதுபட்டி நுழையும் பகுதியில் கனரக வாகனங்கள் நுழையாத வகையில் உயரம் குறைந்த நுழைவுவாயில் அமைக்கப்பட்டது.இதன் காரணமாக கனரக வாகனங்கள் உள்ளே வருவது தடை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் இந்த நுழைவுவாயிலை யாரோ சிலர் அகற்றினர்.

இதனால் மீண்டும் கனரக வாகனங்கள் சாலையின் வழியே பயணிக்க துவங்கியது. இதன் காரணமாக மீண்டும் அரசு அலுவலகப் பணியாளர்களுக்கு இடையூறு ஏற்படுவது ஏற்படுவது மாவட்ட கலெக்டருக்கு தெரியவந்தது. இதனையடுத்து இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் நுழைவுவாயில் கட்டும் பணி தற்போது அதே இடத்தில் துவங்கி உள்ளது. இதன்படி, தற்போது, கனரக வாகனங்கள் நுழையாத அளவிலான நுழைவுவாயில் கட்டும்படி தற்போது நடந்து வருகிறது.

The post தேனி கலெக்டர் வளாகத்தில் நுழைவுவாயில் கட்டும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Theni Collectorate ,Theni ,Vadaputhupatti ,Collector ,Perundita ,Theni District Collector ,District Rural Development Agency ,Theni Collector Complex ,Dinakaran ,
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...