×

அறைஹட்டி கிராமத்தில் கோயில் தடுப்பு சுவரை இடித்து ஒற்றை யானை அட்டகாசம்

 

ஊட்டி,பிப்.10: ஊட்டி அருகேயுள்ள அறைஹட்டி கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானை அங்குள்ள கோயில் தடுப்பு சுவரை இடித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தற்போது அனைத்து பகுதிகளிலும் வனவிலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக,காட்டு யானைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளன. இவைகள் உணவு தேடி மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வரும் போது, மனித விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊட்டி அருேகயுள்ள அறைஹட்டி கிராமத்தில் தற்போது ஒரு யானைக்கூட்டம் அடிக்கடி வலம் வருகிறது.

இவைகள் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வருவதால் பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.நேற்று அதிகாலை ஒரு காட்டு யானை ஊருக்குள் வந்தது.இந்த யானை அங்குள்ள அம்மன் கோயிலுக்குள் சென்று, அங்கிருந்த தடுப்புச்சுவரை இடித்து தள்ளியுள்ளது. அறைஹட்டி கிராமத்திற்குள் காட்டு யானை ஒன்று வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. யானையை வனத்துறையினர் அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post அறைஹட்டி கிராமத்தில் கோயில் தடுப்பு சுவரை இடித்து ஒற்றை யானை அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Chamkhatti ,Ooty ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்