×

நீர்வளத்துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

 

ஊட்டி,பிப்.10:ஊட்டி நீர்வளத்துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்திற்கு தகுதி வாய்ந்தவர்கள் வரும் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.  நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் மன்மதன் கூறியிருப்பதாவது, ஈரோடு, நீர்வளத்துறை பவானி வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் கட்டுபாட்டில் உள்ள பவானிசாகர் அணை கோட்டம் செயற்பொறியாளர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் நீலகிரி மாவட்டம் ஊட்டி நீர்வளத்துறை பாசன உப கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஒரு ஜீப் ஒட்டுநர் பணியிடம் காலியாக உள்ளது.

ரூ.19 ஆயிரத்து 500 – ரூ.71 ஆயிரத்து 900 ஊதிய ஏற்ற முறையிலான இப்பணிக்கு தகுதியான நபர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரைக்கும் நபர்கள் தவிர, இதர தகுதியுள்ள நபர்கள் தங்களது வயதுசான்று, கல்விசான்று, சாதிசான்று, குடும்ப அட்டை நகல், ஓட்டுநர் உரிமம், மூன்றாண்டு முன் அனுபவ சான்று ஆகியவற்றின் சுயசான்றொப்பமிட்ட நகல்களுடன் கண்காணிப்பு பொறியாளர், நீர்வளத்துறை, பவானி வடிநில வட்டம், ஈரோடு – 11 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் வரும் 23ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

இப்பணிக்கு பொதுப் போட்டி (முன்னுரிமையற்றவர்) விண்ணப்பிக்கலாம்.மேலும் கல்வித்தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனங்களை ஓட்டுவதில் மூன்று வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.நல்ல உடல் ஆரோக்கியமும், கண் பார்வையும் வேண்டும். 1.07.2023 அன்று பொது போட்டி (முன்னுரிமையற்றவர்) 18 வயது நிரம்பியவராகவும், 32 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் எக்காரணத்தை கொண்டும் ஏற்று கொள்ளப்படமாட்டாது. கால தாமதத்திற்கு நிர்வாகம் பொறுப்பேற்காது. இவ்வாறு நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் மன்மதன் தெரிவித்துள்ளார்.

The post நீர்வளத்துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Water Resources Department ,Ooty ,Ooty Water Resources Department ,Manmadhan ,Bhavanisagar Dam Zone ,Erode ,Bhavani Watershed Circle ,
× RELATED பூங்காவில் பூத்தது ரோஜா பூக்கள்