×

தீ விபத்தில் பெண் பலி குடியாத்தம் அருகே

குடியாத்தம்,பிப்.10: குடியாத்தம் அருகே சமையல் செய்யும்போது ஏற்பட்ட தீ விபத்தில் பெண் பரிதாபமாக பலியானார். குடியாத்தம் பார்வதியபுரம் கிராமத்தை சேர்ந்த பார்த்திபன் மனைவி தனலட்சுமி(26). இவர் கடந்த 4ம் தேதி வழக்கம் போல் தனது வீட்டில் காஸ் அடுப்பில் சமைத்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தனலட்சுமி சேலையில் தீப்பிடித்து பரவியுள்ளது. இதில் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டு வலியால் துடித்த அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி தனலட்சுமி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தீ விபத்தில் பெண் பலி குடியாத்தம் அருகே appeared first on Dinakaran.

Tags : Gudiatham ,Parthippan ,Thanalakshmi ,Parvathiyapuram ,Kudiatham ,
× RELATED ‘ரீல்ஸ்’ மோகத்தில் மனைவி கையை வெட்டிய கணவன்