×

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கிருஷ்ணகிரி, பிப்.10:கிருஷ்ணகிரி மது விலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபாவதிக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அவரது தலைமையில் போலீசார் கிருஷ்ணகிரி-சேலம் சாலையில் மோட்டூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி பின்புறம் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் கஞ்சா பதுக்கி வைத்து விற்று வருவது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் அக்ரஹாரம் முல்லைநகர் பகுதியை சேர்ந்த சந்தோஷ்(26) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ₹3 ஆயிரம் மதிப்பிலான 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

The post கஞ்சா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Inspector ,Prabhavathi ,Krishnagiri Liquor Prohibition Enforcement Unit ,Krishnagiri-Salem road ,
× RELATED பர்கூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்