×

போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்பவர்களின் ஜிஎஸ்டி பதிவை முடக்க வேண்டும்: அமைச்சர் மூர்த்தி உத்தரவு

சென்னை: சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் 2024ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோர்கள் மீது உரிய நடவடுக்கை எடுக்கவும், தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுவோர் கண்காணிக்கப்பட்டு அவர்களின் ஜிஎஸ்டி பதிவு முடக்கம் செய்யவும் அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, வணிகவரித்துறை ஆணையர் ஜகந்நாதன், கூடுதல் ஆணையர் அதிக வரிச்செலுத்துவோர் பிரிவு, இணை ஆணையர் நிர்வாகம் உமா மகேஸ்வரி மற்றும் வணிகவரித்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

The post போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்பவர்களின் ஜிஎஸ்டி பதிவை முடக்க வேண்டும்: அமைச்சர் மூர்த்தி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister Murthy ,CHENNAI ,Nandanam Integrated Commercial Tax Complex ,Forum ,Tax ,Minister ,Murthy ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...