×

அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி வேண்டும்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவ கல்லூரி என்ற கொள்கையின் அடிப்படையில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும். தற்போது 2024-25ம் ஆண்டில் புதிய கல்லூரிகளை திறக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியது. அடுத்தாண்டு முதல் தமிழ்நாட்டில் புதிய மருத்துவ கல்லூரிகளை திறக்க முடியாது. கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை உருவாக்க முடியாது. எனவே, தேசிய மருத்துவ ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று, மருத்துவ கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களிலும் புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை தமிழக அரசே சொந்த நிதியில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

The post அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,Tamil Nadu ,CHENNAI ,BAMA ,President ,Kanchipuram ,Ranipettai ,Tirupattur ,Perambalur ,Mayiladuthurai ,Tenkasi ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...