- வைகோ
- மதுரை
- பிரதேச ரயில்வே
- சென்னை தேர்வு வாரியம்
- சென்னை
- மத்யமிக் பொதுச் செயலாளர்
- வைகோ
- ரயில்வே தேர்வு வாரியங்கள்
- திருவனந்தபுரம்
- தெற்கு ரயில்வே
- திருச்சி
- சேலம்
- சென்னை தேர்வு வாரியம். ...
- மதுரை பிரிவு ரயில்வே
- தின மலர்
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: தெற்கு ரயில்வேயில் சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் ரயில்வே தேர்வு வாரியங்கள் செயல்பட்டு வருகிறது. முன்பு சென்னை, திருச்சி, சேலம் மற்றும் மதுரை கோட்ட காலியிடங்கள் சென்னை தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வந்தது. அதேபோல், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் கோட்ட காலியிடங்கள் திருவனந்தபுரம் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வந்தது. தற்போது, கோட்டக் காலியிடங்கள் திருவனந்தபுரம் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளது. ரயில்வே நிர்வாகத்தின் தவறான முடிவால் தமிழக இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய 750 காலி பணியிடங்கள் கேரள மாநிலத்திற்கு செல்ல உள்ளது. இந்த நடைமுறையை மாற்றி, மதுரை கோட்ட காலியிடங்களை சென்னை தேர்வு வாரியம் மூலம் நிரப்ப வேண்டும். இதற்கான உத்தரவை ஒன்றிய ரயில்வே அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும்.
The post மதுரை கோட்ட ரயில்வேயில் உள்ள காலியிடங்களை சென்னை தேர்வு வாரியம் மூலம் நிரப்ப வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.