×

ராஜேஷ்தாஸ் வழக்கில் 12ம் தேதி தீர்ப்பு

விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைைய எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற செய்யக்கோரி மனுக்களும் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, தினமும் மேல்முறையீடு வழக்கு விசாரணை நடைபெறும் என்று விழுப்புரம் நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, கடந்த 5 நாட்களாக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் ஆஜராகி தனது தரப்பு வாதத்தை முன் வைத்தார். நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேஷ்தாஸ் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, ‘தங்கள் தரப்பு வாதம் இன்னும் முடிவடையவில்லை. இதனால் மேலும் அவகாசம் வழங்க வேண்டும்’ என்று கேட்டனர். இதனை நீதிபதி பூர்ணிமா ஏற்க மறுத்து, வரும் 12ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

The post ராஜேஷ்தாஸ் வழக்கில் 12ம் தேதி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Rajeshtas ,Viluppuram ,Viluppuram Court ,Dinakaran ,
× RELATED பாலியல் தொல்லை விவகாரம்: முன்னாள்...