×

பழநி பிரசாதம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பழநி கோயில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம், லட்டு, முறுக்கு, அதிரசம், சர்க்கரை பொங்கல், புளியோதரை, தேன், தினை மாவு போன்றவை தரமான முறையில் தயார் செய்து பக்தர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோயில் நிர்வாகம் மூலம் காலாவதியான பொருட்கள் எதுவும் விற்பனை செய்யப்படவில்லை. பொய்யான தகவல்களை பரப்பிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post பழநி பிரசாதம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Palani ,Prasad ,Dindigul District ,Palani Dandayuthapani Swamy Hill Temple administration ,Palani temple ,
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது