×

அத்தை, மாமன் மகன், மகள்கள் அம்மா, பாட்டி, கொள்ளுப்பாட்டியை திருமணம் செய்து கொள்ள கூடாது

* உத்தரகாண்ட் பொது சிவில் சட்டத்தில் தடை

* பாஜ அரசை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

புதுடெல்லி: நாட்டிலேயே முதல் முறையாக உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்டத்தில், அம்மா, பாட்டி, கொள்ளுப்பாட்டி, பேத்தி, கொள்ளுப்பேத்தி உள்ளிட்டவர்கள் திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்ட உறவுமுறைகள் என கூறப்பட்டிருக்கிறது.மதம், சாதி பேதமின்றி அனைவருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை கொண்டு வரும் பொது சிவில் சட்டம் உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. விரைவில் அம்மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வர உள்ளது.

இந்நிலையில் இந்த சட்ட மசோதா நகல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அதில் 164ம் பக்கத்தில் சட்டப்பிரிவு 3(1)(டி)ன் கீழ் திருமணம் செய்து கொள்ள தடை செய்யப்பட்ட உறவுமுறைகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆண், பெண்களுக்கென தலா 37 உறவுமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் அத்தை, மாமன் மகன், மகள்களை திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உறவுமுறையில் திருமணம் செய்யக்கூடாது என கூறப்பட்டுள்ளது.

இது மட்டுமா, அம்மா, பாட்டி, கொள்ளுப்பாட்டி, தாத்தாவின் 2ம் தாரமான பாட்டி, மகள், மருமகள், பேரனோட விதவை மனைவி, பேத்தி, கொள்ளுப்பேத்தி, பேத்தியுடைய மகனின் விதவை மனைவி போன்ற உறவுமுறைகளும் திருமணம் செய்ய தடை செய்யப்பட்ட உறவுமுறைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. பெண்களுக்கான பட்டியலில் அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா, பேரன், கொள்ளுப்பேரன் உள்ளிட்ட உறவுமுறைகளும் உள்ளன.

இந்த பட்டியல் சமூக வலைதளத்தில் பகிரும் பலரும் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். சட்டமாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? எப்படி ஒருவன் அம்மாவையோ, பாட்டி, கொள்ளுப்பாட்டியையோ திருமணம் செய்து கொள்ள முடியும். நடைமுறையில் சாத்தியமில்லாத இதுபோன்ற விஷயங்கள் தேவையா என கேள்வி கேட்டு வருகின்றனர்.

The post அத்தை, மாமன் மகன், மகள்கள் அம்மா, பாட்டி, கொள்ளுப்பாட்டியை திருமணம் செய்து கொள்ள கூடாது appeared first on Dinakaran.

Tags : BJP government ,New Delhi ,Uttarakhand Assembly ,
× RELATED தேர்தல் பத்திரங்கள் முறைகேடு...