×

சென்னை ஓபன் சேலஞ்சர் அரையிறுதில் சுமித் நாகல்

சென்னை: ஏடிபி சேலஞ்சர் சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, இந்திய வீரர் சுமித் நாகல் தகுதி பெற்றார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செக் குடியரசின் டொமினிக் பலனுடன் நேற்று மோதிய நாகல் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்றார்.

இப்போட்டி 1 மணி, 31 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு காலிறுதியில் செக் குடியரசின் டலிபோர் ஸ்விர்சினா 6-7 (6-8), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் இந்தியாவின் முகுந்த் சசிகுமாரை 2 மணி, 54 நிமிடம் போராடி வீழ்த்தினார். சீன தைபே வீரர் சுன் ஹ்சின் செங்கும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

The post சென்னை ஓபன் சேலஞ்சர் அரையிறுதில் சுமித் நாகல் appeared first on Dinakaran.

Tags : Sumit Nagal ,Chennai Open Challenger ,CHENNAI ,ATP Challenger Chennai Open tennis ,Nagal ,Czech Republic ,Dominic Palan ,finals ,Dinakaran ,
× RELATED ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்