×

பாதுகாப்புத்துறையில் ரூ.5,077 கோடி நேரடி அந்நிய முதலீடு

புதுடெல்லி: பாதுகாப்புத்துறை சார்ந்த நிறுவனங்களால் ரூ.5,077 கோடி நேரடி அந்நிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் அஜய் பட் கூறியுள்ளார். மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஒன்றிய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட், “பாதுகாப்புத்துறையில் தனியார் முதலீடுகளுக்கு கடந்த 2021 மே மாதம் அனுமதி வழங்கப்பட்டது.

பாதுகாப்புத்துறையில் நேரடி அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக வௌிநாட்டு அசல் உபகரண உற்பத்தியாளர்களுடன் இணைந்து முக்கிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் இணை வளர்ச்சியை அரசு ஊக்குவிக்கிறது. பாதுகாப்புத்துறை சார்ந்த நிறுவனங்கள் மூலம் இதுவரை ரூ.5,077 கோடி நேரடி அந்நிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

The post பாதுகாப்புத்துறையில் ரூ.5,077 கோடி நேரடி அந்நிய முதலீடு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union Minister ,Ajay Bhatt ,Lok Sabha ,Union Minister of State for Defense ,Dinakaran ,
× RELATED போலி பயனர்களை களையெடுக்க எல்பிஜி...