×

குழந்தை பராமரிப்பு அறைகள், தூய்மையான கழிவறைகள் தேசிய நெடுஞ்சாலைகளில் அடிப்படை வசதிகள் தரும் ஹம்சபர் திட்டம்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்

புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களுக்கு இனிமையான, பாதுகாப்பான பயண அனுபவங்களை தரும் நோக்கத்தில் ஹம்சபர் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி தேசிய நெடுஞ்சாலைகளில் குழந்தை பராமரிப்பு அறைகள், தூய்மையான கழிவறைகள், மின் வாகனங்களுக்கான சார்ஜர் அமைப்புகள், சக்கர நாற்காலிகளுக்கான ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிடங்கள், எரிபொருள் நிலையங்களில் தங்குமிடங்கள் உள்ளிட்டவைகள் ஹம்சபர் திட்டம் அறிமுகப்படுத்துகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தை ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்கரி, “ தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் விதிமுறைகளின்படி அடிப்படை வசதிகளை செய்து தருவதை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

The post குழந்தை பராமரிப்பு அறைகள், தூய்மையான கழிவறைகள் தேசிய நெடுஞ்சாலைகளில் அடிப்படை வசதிகள் தரும் ஹம்சபர் திட்டம்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Nitin Gadkari ,New Delhi ,
× RELATED நிதின் கட்கரி விளக்கம்: அரசியல் திருப்தியடையாத ஆன்மாக்கள் நிறைந்த கடல்