இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தேர்தலில் முக்கிய திருப்பமாக சிறையில் இருக்கும் முன்னார் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தேசிய சட்டமன்றம், நாடாளுமன்றத்தின் கீழ் சபை மற்றும் நான்கு மாகாண சட்டசபைகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சி, மற்றொரு முன்னாள் பிரதமரும் சிறையில் இருப்பவருமான இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி, முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் சர்தாரி பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியன களத்தில் இருந்தன.
வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் நேற்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று மாலை முதல் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி 144 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளதாக அதன் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்ரானின் ஆதரவாளர்களுக்கு கிரிக்கெட் மட்டை சின்னம் ஒதுக்கப்படாததால், அவர்கள் சுயேட்சை சின்னங்களில் போட்டியிட்டனர். பாகிஸ்தான் பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இம்ரான் கானின் பிடிஐ கட்சி ஆதரவு சுயேச்சைகள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. என தகவல். தற்போது வரை 55 இடங்களில் வென்றுள்ளனர். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லாகூர் தொகுதியிலும், பிபிபி கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ குவாம்பெர் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர். பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 265 நாடாளுமன்ற தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 133 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
மொத்தமுள்ள 265 தொகுதிகளில் பிடிஐ கட்சித் தலைவர் இம்ரான்கான் ஆதரவு சுயேச்சைகள் 84 இடங்களை வென்றுள்ளது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 59 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 44 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது
The post பாகிஸ்தான் பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இம்ரான் கானின் பிடிஐ கட்சி ஆதரவு சுயேச்சைகள் அதிக இடங்களில் முன்னிலை appeared first on Dinakaran.