×

ஒன்றிய அரசை கண்டித்து தென்காசியில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

*இந்தியா கூட்டணியினர் திரளாக பங்கேற்பு

தென்காசி : மாநில உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தியும், ஆளுநரின் அரசியல் அத்துமீறல்கள் மற்றும் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் பாரபட்சத்தை கண்டித்தும் தென்காசியில் மார்க்சிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார். கணபதி, வேலுமயில், அசோக்ராஜ், தங்கம், குணசீலன், உச்சிமாகாளி முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ, தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் எம்எல்ஏ, தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், துணைத்தலைவர் கேஎன்எல் சுப்பையா, மதிமுக தெற்கு மாவட்டச் செயலாளர் உதயசூரியன், மாவட்ட அவைத்தலைவர் வெங்கடேஸ்வரன் கண்டன உரையாற்றினர்.

தென்காசி யூனியன் சேர்மன் வல்லம் ஷேக் அப்துல்லா, மதிமுக நகரச் செயலாளர் கார்த்திக், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் இசக்கித்துரை, சுப்பையா, கிட்டப்பா, விசிக மாவட்டச் செயலாளர் பண்பொழி செல்வம், மண்டல துணைச்செயலாளர் சித்திக், சந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் செய்யது பட்டாணி, பொதுக்குழு உறுப்பினர் முகம்மது அலி, மார்க்சிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினர்கள் பால்சாமி, கண்ணன், நடராஜன், மாரியப்பன், சங்கரி, லெனின்குமார், பால்ராஜ், ஆயிஷா, மேனகா, குருசாமி, ராமமூர்த்தி, வன்னிய பெருமாள், திமுக மருத்துவ அணி மாநில துணைச் செயலாளர் செண்பக விநாயகம்,

திமுக தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட துணைச் செயலாளர் கென்னடி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, சேக்தாவூது, பொதுக்குழு உறுப்பினர்கள் சாமித்துரை, தமிழ்செல்வி, ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், வல்லம் திவான் ஒலி, சீனித்துரை, சிவன்பாண்டியன், மகேஷ் மாயவன், நகரச் செயலாளர்கள் வெங்கடேசன், அப்பாஸ், அந்தோனிசாமி, பேரூர் செயலாளர்கள் மேலகரம் சுடலை, குட்டி, முத்தையா, பண்டாரம், வெள்ளத்துரை, கோபால், சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் கிருஷ்ணராஜா, ரமேஷ், இஞ்சி இஸ்மாயில், முருகன், முத்துராமலிங்கம், வளன் அரசு, இசக்கிப்பாண்டியன், துணை அமைப்பாளர்கள் பேச்சிமுத்து, ராமராஜ், நசீர், முகையதீன் கனி, முகமது அப்துல் ரஹீம், சுப்பிரமணியன், சண்முகநாதன் கோரிக்ைககளை விளக்கிப் பேசினர்.

இதில் கவுன்சிலர்கள் திவான் மைதீன், பொன்செல்வன், நகர நிர்வாகிகள் ஷேக்பரீத், பால்ராஜ், ராம்துரை, இசக்கிரவி, சண்முகநாதன், அருணாசலம், முகமது அலி, முகமது முஸ்தபா, மைதீன் பிச்சை, மைதீன் அலி, கமருதீன், கஜேந்திரன், வேல்ஐயப்பன், திருநாவுக்கரசு, விமல் ஆதித்தன், தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட அவைத் தலைவர் பத்மநாதன், மாவட்ட துணைச் செயலாளர்கள் மனோகரன், புனிதா, பொதுக்குழு உறுப்பினர் வேலுச்சாமி பாண்டியன், ஒன்றியச் செயலாளர்கள் லாலா சங்கர பாண்டியன், கடற்கரை, கிறிஸ்டோபர், மாணவர் அணி அமைப்பாளர் உதயகுமார், வட்டார காங்கிரஸ் தலைவர் குற்றாலம் பெருமாள், நகர தலைவர் மாடசாமி ஜோதிடர், பொருளாளர் ஈஸ்வரன், சந்தோஷ், கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், ரபீக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் வட்டாரச் செயலாளர் அயூப்கான் நன்றி கூறினார்.

The post ஒன்றிய அரசை கண்டித்து தென்காசியில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : South Kazi ,Union Government ,Allies of India ,Tenkazi ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு நடத்தும் நீட் தேர்வில்...