×

திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி அரங்கில் கலைஞர் பண்பாட்டுப் பாசறை விழா

கடலூர்: கடலூர், திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி அரங்கில் கலைஞர் நூற்றாண்டு விழாவின் அங்கமாக கலைஞர் பண்பாட்டுப் பாசறை விழா நடைபெற்றது. விழாவிற்கு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.  சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பங்கேற்று கலைஞர் நூற்றாண்டு புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்து, புகைப்பட கண்காட்சி மற்றும் சுற்றுலா, வேளாண்மை , தோட்டக்கலை, தொழிலாளர் நலன், குழந்தை வளர்ச்சி, மாற்றுத்திறனாளிகள், பள்ளி கல்வி உள்ளிட்ட துறைகள் சார்பாக அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிடனர். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் வரவேற்றார்.

அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடக்கவுரையாற்றினார். கடலூர் மாவட்ட அளவில் நடந்த பல்வேறுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். அதேபோல் கலை பண்பாட்டுத்துறை சார்பில் பல்வேறு கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார். தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் ஐ.லியோனி,  சுற்றுலா , பண்பாடு மற்றும் அறநிலையத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் க.மணிவாசன், கடலூர் எம்எல்ஏ கோ.ஐயப்பன், மையர் சுந்தரி, துணைமேயர் பா.தமரைச்செல்வன், மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சித்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, திண்டுக்கல் ஐ.லியோனி பட்டிமன்றம், ஜாகிர் உசேன் குழுவினரின் நாட்டிய நாடகம், கலைஞர் பண்பாட்டு பாசறை விழா, நடைபெற்றது. இசை அமைப்பாளர் பரத்வாஜ் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள்  நடைபெற்றது.

The post திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி அரங்கில் கலைஞர் பண்பாட்டுப் பாசறை விழா appeared first on Dinakaran.

Tags : Artist Cultural Workshop ,St. Valanar High School Hall ,Tirupathiripuliyur ,Cuddalore ,St. Valanar Higher Secondary School ,Welfare Minister ,MRK Panneerselvam ,Tourism Minister ,K. Ramachandran ,Artist Cultural Festival ,
× RELATED பயணிகளை ஏற்றி செல்ல மறுப்பு கண்டக்டர்,...