×

மோடியின் ஏமாற்று வேலை 2024ல் எடுபடாது

*மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டத்தில் சண்முகையா எம்எல்ஏ பேச்சு

தூத்துக்குடி : மோடியின் ஏமாற்று வேலை 2024ல் எடுபடாது என்று தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சண்முகையா எம்எல்ஏ பேசினார்.
மாநில உரிமைகள் காத்திடவும், கூட்டாட்சி கோட்பாட்டை சிதைக்கும் வகையில் ஆளுநர்கள் மூலம் ஆட்சி செய்ய முயற்சி செய்யும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூ. சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான சண்முகையா, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:

ஒன்றிய பாஜ அரசு, கடந்த 10 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்று சொன்ன வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பிரதமர் மோடியின் ஏமாற்று அறிவிப்புகளை மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை. எனவே 2024 நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் ஏமாற்று வேலை எடுபடாது. மழை வெள்ள பாதிப்பிற்கான நிவாரண தொகையை ஒன்றிய அரசு இதுவரை வழங்கவில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் வரும் பாஜவை நம்பி செல்வதற்கு யாரும் தயாராக இல்லை. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி அமோக வெற்றிப்பெறும், என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங். சிறுபான்மை பிரிவு மாநில துணை தலைவர் இதயதுல்லா, இந்திய கம்யூ. மாவட்ட செயலாளர் கரும்பன், மதிமுக வெளியீட்டு குழு தலைவர் நக்கீரன், மமக மாவட்ட பொறுப்பாளர் அகமது இக்பால், திமுக மாநில பேச்சாளர் சரத்பாலா, மாநகர் மாவட்ட காங். தலைவர் முரளிதரன், வடக்கு மாவட்ட திமுக பொருளாளர் ரவீந்திரன், மார்க்கிஸ்ட் மாநில குழு உறுப்பினர் பாஸ்கரன் ஆகியோர் பேசினார்.

இதில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, வடக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி, மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர துணை செயலாளர் பிரமிளா, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், பவானி மார்ஷல், ஜெயசீலி, வைதேகி, கண்ணன், விஜயகுமார், நாகேஸ்வரி, கந்தசாமி, பாப்பாத்தி, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் நிக்கோலஸ்மணி, ஜேசையா, மாவட்ட பிரதிநிதி செல்வக்குமார், மாநகர அணி துணை அமைப்பாளர்கள் ரவி, பால்ராஜ், செந்தில்குமார், குமரன், தொமுச தொழிற்சங்க நிர்வாகிகள் முருகன், மரியதாஸ், கருப்பசாமி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம்,

வட்ட செயலாளர்கள் பாலு (எ) பாலகுருசாமி, சுப்பையா, சிங்கராஜ், செந்தில்குமார், முத்துராஜா, மனோ, கதிரேசன், கங்காராஜேஷ், லியோஜான்சன், தெற்கு மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, ஓன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, புதூர் சுப்பிரமணியன், துணை செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன், பகுதி செயலாளர் சிவக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் நாகராஜன், பூபேஷ், தர்மராஜ், வட்ட செயலாளர்கள் கார்த்திகேயன், மகேஷ்செல்வம், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர்கள் சங்கரன், மணிராஜ், மாநில குழு உறுப்பினர் பூமயில், மாநகர செயலாளர் முத்து, செயற்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட குழு உறுப்பினர் மாரியப்பன், கவுன்சிலர் முத்துமாரி, துறைமுக சபை உறுப்பினர் ரசல், இந்திய கம்யூ. மாநகர செயலாளர் ஞானசேகர், துணை செயலாளர் மாடசாமி மற்றும் கப்பிகுளம் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மோடியின் ஏமாற்று வேலை 2024ல் எடுபடாது appeared first on Dinakaran.

Tags : Modi ,Shanmukhaiya ,MLA ,Thoothukudi ,Shanmukhaiah ,
× RELATED பிரதமர் நரேந்திரமோடி வீட்டுக்கும்...