×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை பிப்.23ம் தேதிக்கு ஒத்திவைத்தது உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம்..!!

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை உதகை நீதிமன்றம் பிப்ரவரி.23ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இந்த பங்களாவில், கடந்த 2017ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. அப்போது இரவு காவலாளி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் சேலத்தை சேர்ந்த கனகராஜ் மற்றும் கேரளாவை சேர்ந்த சயான் உள்பட 10 பேர் ஈடுபட்ட நிலையில் அதுகுறித்த வழக்கானது உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 6 ஆண்டு காலமாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் இந்த வழக்கை சோலைமட்டம் போலீசார் விசாரித்த நிலையில் 2021ம் ஆண்டு தனிப்படை போலீசாருக்கு மாற்றப்பட்டது. தற்போது கடந்த ஓராண்டு காலமாக சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கு விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான குழுவினர் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் புதிய துப்புகள் கிடைக்கிறதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருக்கக்கூடிய சயான் உள்ளிட்ட 10 பேருடைய செல்போன்கள் மற்றும் அதில் பதிவான தகவல்கள், தகவல் பரிமாற்றங்கள் குறித்த ஹகவல்களை சேகரிக்கும் பணியானது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் வளையார் மனோஜ் ஆஜராகினார்.

அதேபோல சிபிசிஐடி தரப்பில் ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசாரும் அதே போல சிறப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோரும் ஆஜராகினர். அப்போது குஜராத்தில் இருந்து திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் வந்த தொழில்நுட்ப நிபுணர்கள் வழக்கு தொடர்பாக தகவலை சேகரித்தனர். கோடநாடு கொலை, கொள்ளை நடந்த நாளில் பதிவாகி இருந்த செல்போன், தொலைபேசி டவர்களின் தகவல்களை சேகரித்தனர். சேலம் நீதிமன்றத்தில் அனுப்பிவைப்பார்கள் என்றும் அறிக்கை கிடைத்த பின்னர் தான் அடுத்தகட்ட விசாரணையை தொடங்க வேண்டும் என்பதனால் வழக்கு விசாரணைக்கு கால அவகாசம் கோரியது.

அதனை தோபிடர்ந்து நீதிபதி இந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனிடையே நீதிமன்றத்தில் எதிரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் கொடநாடு பங்களாவை நீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும் என்ற மனுவை தாக்கல் செய்தார். அதனை பெற்று கொண்ட நீதிபதி அதற்கு உடனடியாக 23ம் தேதி பதிலளிக்குமாறு அரசு தரப்பிற்கு உத்தரவிட்டார். குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது கொடநாடு கொலை, கொள்ளை நடைபெற்ற இடத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தடையங்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளை எஸ்டேட் நிர்வாகம் எடுத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்த வமனுவை நீதிபதி பெற்று கொண்டு வந்த மனுவிற்கு பதிலளிக்குமாறு அரசு தரப்பிற்கு உத்தரவிட்டார்.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை பிப்.23ம் தேதிக்கு ஒத்திவைத்தது உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Udagai District Sessions Court ,Kodanadu ,Takai ,Chief Minister ,Jayalalithaa ,Kodanad ,Nilagiri district Kotagiri ,Udagai District Session Court ,Dinakaran ,
× RELATED வனவிலங்குகளை வேட்டையாடிய வழக்கு:...