×

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ரூ.96 ஆயிரம் கோடிக்கு ஏலம் விட ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ், 2500 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஸ்பெக்ட்ரம் 20 ஆண்டுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் மொத்தம் 10,523.15 மெகா ஹெர்ட்ஸ் ரூ.96,317.65 கோடி மதிப்பீட்டில் (இருப்பு விலையில்) வழங்கப்படுகிறது.

தொலைத்தொடர்பு சேவைகளின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஸ்பெக்ட்ரம் கிடைப்பதை அதிகரிக்கும் நோக்கில், தற்போதுள்ள ஸ்பெக்ட்ரம் பயன்பாடுகளை மீண்டும் உருவக்குவது குறித்து பரிசீலிக்க, ஒன்றிய அமைச்சரவை செயலாளர்கள் குழுவையும் அமைத்துள்ளது.

தானியங்கி ரயில் பாதுகாப்பு (ATP) அமைப்புகள் மற்றும் செயல்பாடுகளுக்கான 700 MHz அலைவரிசையில் NCRTC போன்ற இரயில் அடிப்படையிலான நகர்ப்புற/பிராந்திய போக்குவரத்து அமைப்புகளின் ஸ்பெக்ட்ரம் தேவைகளுக்கான முன்மொழிவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

The post ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ரூ.96 ஆயிரம் கோடிக்கு ஏலம் விட ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : EU Cabinet ,Delhi ,Union Cabinet ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...