×

புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தடை

புதுச்சேரி: புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கலந்து இருப்பதாக வெளியான செய்தியை தொடர்ந்து தற்போது இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடற்கரை சாலையில் சுற்றுலா தளங்களில் பஞ்சு மிட்டாய் விற்பனை என்பது எப்பொழுதும் நடைபெறும் பல வண்ணங்களில் காட்சி அளிக்கும்.

குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டும் வகையில் இது விற்கப்பட்டு வருகிறது. பெற்றோரும் இதனை ஆர்வத்துடன் இதனை தங்களது குழந்தைகளுக்கு வாங்கி கொண்டது வந்துள்ளனர். இந்த பஞ்சு மிட்டாய் மீது உணவு பாதுகாப்பு அதிகாரியான ரவிச்சந்திரன் ஒரு வாரத்திற்கு முன்பாக பஞ்சு மிட்டாய் வாங்கி சோதனை செய்தபோது அதில் ரசாயனம் கலந்து இருப்பது தெரியவந்தது. குறிப்பாக ரோடமின்-பி என்ற அபாயகர வேதிப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த அவர் இந்த பஞ்சு மிட்டாய் விற்பனை எங்கு நடக்கிறது என்று பார்த்தபொழுது புதுச்சேரி மற்றும், விழுப்புரம் மாவட்டம் எல்லையான கலைவன நகர் பகுதியில் இந்த உற்பத்தியானது நடைபெற்றது. அந்த உற்பத்தி இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன, ஊழியர்களும் அனைவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் முதல் பிடிப்பட்டவரைப்போல 30க்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

 

The post புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தடை appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Food Safety Department ,
× RELATED குழந்தை குடித்த பாலில் பல்லி பிரபல...