×

மார்ச் முதல் அல்லது 2வது வாரத்தில் தேர்தல் அறிவிப்பு?.. தேர்தல் ஆணைய வட்டாரத்தில் தகவல்

டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் மார்ச் முதல் அல்லது 2வது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. நாடே எதிர்கொக்கி காத்திருக்கும் நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை சந்திக்க பாஜக தயாராகி வருகிறது. பாரதிய ஜனதா கட்சி மிக விரைவில் அதிரடியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விடும் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் இந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக எதிர்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன.

இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் மார்ச் முதல் அல்லது 2ஆவது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக தேர்தல் ஆணையர்கள் மாநில வாரியாக சென்று இறுதி கட்டப் பணிகளை ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளார். மாநிலம் வாரியாக ஆய்வுகள் முடிவதற்கு மார்ச் முதல் வாரம் ஆகும் என்பதால் அதன் பிறகே தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

The post மார்ச் முதல் அல்லது 2வது வாரத்தில் தேர்தல் அறிவிப்பு?.. தேர்தல் ஆணைய வட்டாரத்தில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Commission ,Delhi ,Election Commission ,Nate ,BJP ,Electoral Commission ,Dinakaran ,
× RELATED தேர்தல் தொடர்பான நோட்டீஸ்,...