×

அதிகரித்து வரும் வழிப்பறி, திருட்டுக்களை தடுக்க ரோந்து பணியை தீவிரப்படுத்த கோரிக்கை

 

உடுமலை,பிப்.9: உடுமலை,மடத்துக்குளம் தாலுகா பகுதிகளில் அதிகரித்து வரும் குற்றச்சம்பங்களை தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை போலீஸ் டிஎஸ்பிக்கு இந்திய கம்யூனிஸ் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை தாலுகா கமிட்டி சார்பில் உடுமலை டிஎஸ்பிக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: உடுமலை நகரை ஒட்டியுள்ள ஸ்ரீராம்நகர்,சௌதாமலர் லேஅவுட்,வாசவி நகர்,எஸ்எஸ்காலனி, பழனியாண்டவர் நகர், ஜீவா நகர் ஆகிய பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக திருட்டுக்கள் அதிகரித்துள்ளது.

இதே போல மடத்துக்குளம் வட்டத்தில் கேடிசி மில்,கழுகரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து வழிப்பறி, வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு, பிக்பாக்கெட் உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. இதனால் பெண்கள் இரவில் தனியே நடக்க முடியாத அளவிற்கு பீதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே காவல்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, களவு போன பொருட்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

The post அதிகரித்து வரும் வழிப்பறி, திருட்டுக்களை தடுக்க ரோந்து பணியை தீவிரப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Udumalai Police DSP ,Madathikulam talukas ,Communist Party of India ,Udumalai Taluka Committee ,Dinakaran ,
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு