×

திருநள்ளாறில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் சூடு பிடித்தது சுவர் விளம்பரங்கள் மும்முரம்

 

காரைக்கால்,பிப்.9: பாராளுமன்ற தேர்தல் குறித்து தேர்தல் தேதி அறிவிப்புகள் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பல்வேறு தேசிய, மாநில கட்சிகள் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் காரைக்கால் அடுத்த திருநள்ளாறு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சுவர் விளம்பரம் வரையும் பணிகளை துவக்கி உள்ளனர். புதுச்சேரி மாநிலம் முழுவதும் சுவர் விளம்பரங்கள் எழுத சொல்லி மாநில தலைமை அறிவித்திருந்தது.

இதனை அடுத்து திருநள்ளாறு தொகுதியில் தாமரைச் சின்னம் வரையும் பணியை புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவர் ஜிஎன்எஸ் ராஜசேகர் நேற்று துவக்கி வைத்தார். இதில் வேண்டும் மோடி, மீண்டும் மோடி என்ற முழக்கத்துடன் இந்த சுவர் விளம்பரம் செய்யும் பணி துவங்கியது. இதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் சுவர் விளம்பரம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.

The post திருநள்ளாறில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் சூடு பிடித்தது சுவர் விளம்பரங்கள் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Thirunallar ,Karaikal ,Bharatiya Janata Party ,Tirunallaar ,
× RELATED உத்தரப்பிரதேசம் அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி தோல்வி