×

செட்டிகுளத்தில் மக்களை தேடி மருத்துவ சிறப்பு முகாம்

 

பாடாலூர், பிப். 9: செட்டிகுளம் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் சிறப்பு முகாம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் சிறப்பு முகாம் நடைபெற்றது. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நடைபெற்ற இம் முகாமில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மணிகண்டன், முத்தரசன், செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர்.

அவர்கள் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று, வீடுகளில் உள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்தனர். இதில் ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு மற்றும் உடல் பரிசோதனை, தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு தேவையான அளவு மருந்து, மாத்திரைகளை வழங்கினர். இதில் சுகாதார ஆய்வாளர் ஆனந்த், செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post செட்டிகுளத்தில் மக்களை தேடி மருத்துவ சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Setikulam ,Batalur, Pip ,Alathur Taluga Settikulam ,Perambalur district ,State Primary Health Center ,Chettikulam ,
× RELATED செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி...