×

இஸ்திரி கடைக்கு ₹10,400 மின் கட்டணம் குறைதீர்வு கூட்டத்தில் மனு ஒரே மின் விசிறி பயன்படுத்தும்

வேலூர், பிப்.9: ஒரே மின் விசிறி பயன்படுத்தும் இஸ்திரி கடைக்கு அதிகமாக விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என பயனாளி புகார் மனு அளித்துள்ளார். காட்பாடியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. மேற்பார்வை பொறியாளர் மதியழகன் தலைமை தாங்கினார். கூட்டடத்தில், பொய்கை சத்தியமங்கலத்தை சேர்ந்த நபர் அளித்த மனுவில், நான் துணிகளுக்கு இஸ்திரி போடும் கடை வைத்துள்ள்ளேன். எனது கடையில் ஒரே ஒரு மின்விசிறி மட்டும் உள்ளது. எனது கடைக்கு 500க்குள் மின் கட்டனம் செலுத்தி வந்தேன். சில மாதத்திற்கு முன் மின் கட்டண தொகை ₹8 ஆயிரத்து 645 மற்றும் அடுத்த மாதம் ₹10,400 வந்துள்ளது. இந்த மின் கட்டணத்தை செலுத்துவில்லையாம். இதனால் ₹34 ஆயிரத்து 500 என செலுத்தும் படியும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் மின் கட்டணம் அதிகமாக இருக்கிறது எனவும், அதனை குறைக்கும்படி நான் மனு அளித்தேன். இதுவரை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது என்னால் அந்த கட்டணம் செலுத்த முடியாது. என்றார். அதற்கு அதிகாரிகள், உங்கள் கடையில் அதிக கிலோவாட் மின்சாரம் பயன்படுத்தியுள்ளதாக ரீடிங்கில் தெரிகிறது. இருப்பினும் உங்கள் கடையில் மின்சார மீட்டரில் சாப்ட்வேர் பொருத்தி அதில் ஒவ்வொரு நாள் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தியுள்ள மின்சாரத்தை கணக்கீட்டை ஆய்வு செய்து உங்களிடம் தெரிவிக்கிறோம். என்றனர்.

தொரப்பாடியை சேர்ந்தவர அளித்த மனுவில், நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். புதிதாக அங்கு வாடகைக்கு வந்துள்ளேன். எனது வீட்டில் இதற்கு முன் இருந்தவர்கள் மின் கட்டணத்தை செலுத்தாமல் சென்று விட்டனர். ஆனால் புதிதாக வந்துள்ள எங்களை மின் கட்டணம் செலுத்தும்படி கூறுகின்றனர். கட்டணமும் அதிகமாக உள்ளது. இதனை குறைக்க வேண்டும். என்றார். அதேபோல் மற்றொருவர் அளித்த மனுவில், தமிழ்நாடு அரசு 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதாக தெரிவித்தது. அந்த பயனாளிகளின் பட்டியலில் எனது பெயரும் உள்ளது. ஆனால் இதுவரை எனக்கு இலவச மின் இணைப்பு வழங்கவில்லை என்றார். அதற்கு அதிகாரிகள், மின் இணைப்பு எண் குறித்து நம்பரை தெரிவித்தால் ஆய்வு செய்து பின்னர் தெரிவிக்கிறோம். என்றனர். நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் அதிக மின்கட்டணம், இலவச மின் இனைப்பு, பொது பிரச்னை ெதாடர்பாக 5 மனுக்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post இஸ்திரி கடைக்கு ₹10,400 மின் கட்டணம் குறைதீர்வு கூட்டத்தில் மனு ஒரே மின் விசிறி பயன்படுத்தும் appeared first on Dinakaran.

Tags : Manu ,Vellore ,Katpadi ,Dinakaran ,
× RELATED காட்பாடியில் அகற்றிய சில மாதங்களில்...