×

தோவாளை ஊராட்சியில் தெருக்களில் கான்கிரீட் தளம்

ஆரல்வாய்மொழி.பிப்.9: தோவாளை ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணன்புதூர், சுந்தரம் தெரு, ஜவகர் நூல் நிலையம் தெரு, பூதத்தான் கோவில் தெரு போன்ற பகுதிகளில் புதிய பைப் லைன் அமைக்கும் பணியும், அந்த பகுதிகளில் உள்ள தெருக்களில் புதிய கான்கிரீட் தளம் அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன் தலைமை வகித்து, பணியை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் தாணு முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் ராமலட்சுமி, பரசுகுமார் ஊராட்சி செயலர் லட்சுமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நல்லசிவம்பிள்ளை, உதவி பொறியாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தோவாளை ஊராட்சியில் தெருக்களில் கான்கிரீட் தளம் appeared first on Dinakaran.

Tags : Thovalai Panchayat ,Krishnanbutur ,Sundaram Street ,Jawagar School Street ,Bhuthathan Kovil Street ,
× RELATED பெண்ணை தாக்கிய வாலிபர் கைது