×

பிரதோஷ விழா

வடமதுரை, பிப். 9: வடமதுரை பஸ் நிறுத்தம் அருகேயுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் தை மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்திதேவருக்கு அரிசி மாவு, மஞ்சள் பொடி, திருமஞ்சன பொடி, பஞ்சாமிர்தம், பால், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட ெபாருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நந்திதேவருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. முன்னதாக சிவபெருமானுக்கும், மீனாட்சி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் சர்க்கரை பொங்கல், பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

The post பிரதோஷ விழா appeared first on Dinakaran.

Tags : Pradosha festival ,North Madurai ,Pradosha ,month ,Meenakshi Sundareswarar temple ,Vadamadurai ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ விழா