×

திமுக- காங்கிரஸ் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

சென்னை: திமுக சார்பில் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவுடன், கடந்த மாதம் 28ம்தேதி காங்கிரஸ் சார்பில் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை 9ம் தேதி (இன்று) நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தை திமுக- காங்கிரஸ் இடையே அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  இதுகுறித்து காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் 10ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்படுகிறது. வரும் 18 மற்றும் 19ம்தேதி காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் மைதானத்தில் நடைபெறுகிறது.

அத்துடன் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வருகை தர உள்ளார். அவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை அன்று சந்தித்து பேசுவார். அப்போது தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நிறைவு பெறும் என்று தெரிவித்தார்.

The post திமுக- காங்கிரஸ் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : DMK-Congress ,Chennai ,Treasurer ,D.R. Balu ,DMK ,Congress ,Mukul Wasnik ,Tamil Nadu Congress ,President ,KS Azhagiri ,Dinakaran ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை...