×

நடிகைக்கு தொந்தரவு கார் டிரைவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

சென்னை: கடந்த ஜனவரி 7ம் தேதி நடிகை ஷெரின் வீட்டில் இருந்த போது, அவரது டிரைவர் கார்த்திக் உன் ரகசியங்களை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. புகாரின்படி, அண்ணா சாலை போலீசார் விசாரணையில் கார் டிரைவர் கார்த்திக் அநாகரிகமாக நடந்ததும் மிரட்டல் விடுத்ததும் தெரிந்தது. அவர் மீது கொலை மிரட்டல், பெண் வன் கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடினர்.

இதற்கிடையே, அவரது நண்பர் இளையராஜா, கடந்த மாதம் 21ம் தேதி மடிப்பாக்கம் குபேரன் நகரில் நடிகையின் சகோதரர் கவுரி ஜனார்த்தனன் வீட்டிற்கு சென்று தகராறு செய்து, அவரது காரை சேதப்படுத்தியுள்ளார். மடிப்பாக்கம் போலீசார், விழுப்புரம் மாவட்டம் கானத்தூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த இளையராஜாவை கடந்த மாதம் 25ம் தேதி கைது செய்தனர்.தலைமறைவாக இருந்த கார் டிரைவர் கார்த்திக் கடந்த 5ம் தேதி மயிலாடுதுறை நீதிமன்றத்தில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், டிரைவர் கார்த்திக்கை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அண்ணாசாலை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

The post நடிகைக்கு தொந்தரவு கார் டிரைவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sherin ,Kartik ,Karthik ,Anna Road Police ,
× RELATED கண்ணூர் அருகே குண்டு வெடித்து மார்க்சிஸ்ட் தொண்டர் பலி: 3 பேர் படுகாயம்