×

பிரதமர் மோடி ஓ.பி.சி இல்லை: ராகுல் காந்தி கடும் தாக்கு

ஜார்சுகுடா: பிரதமர் மோடி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறக்கவில்லை. அவர் தன் சாதி பற்றி மக்களிடம் பொய் சொல்லி வருவதாக ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை ஒடிசாவில் 3ம் நாளாக நேற்று நடந்தது. இதன்ஒரு பகுதியாக ஜார்சுகுடாவில் பொதுமக்களிடம் பேசிய ராகுல் காந்தி, “பிரதமர் மோடி தன் சாதி பற்றி மக்களிடம் தொடர்ந்து பொய் சொல்கிறார். மோடி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறக்கவில்லை. அவர் காஞ்சி என்ற பொதுபிரிவில் பிறந்தவர்.

குஜராத்தில் மோடி தலைமையிலான பாஜ ஆட்சியின்போது காஞ்சி சமூகம் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்க்கப்பட்டது. ஆனால் தன்னை ஓபிசி என்று சொல்லி கொண்டு பிரதமர் மோடி மக்களை தவறாக வழிநடத்துகிறார்.
பொதுபிரிவில் பிறந்த மோடி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மாட்டார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் சமூக நீதியை அடைய முடியாது. சாதிவாரி கணக்கெடுப்பு, சமூக நீதி பற்றி பேசும் போதெல்லாம் நாட்டில் ஏழை, பணக்காரர் என இரண்டு சாதிகள் மட்டுமே இருப்பதாக மோடி கூறுகிறார். அப்படியானால் பகலில் பலமுறை ஆடைகளை மாற்றி கொள்ளும் பிரதமர் மோடி ஏழை சாதியில்லை. அவர் ஏழைகளுடனும், ஓபிசிக்களுடனும் கைக்குலுக்குவதில்லை. கோடீஸ்வரர்களை மட்டுமே அவர் கட்டிப்பிடிக்கிறார். காங்கிரஸ் கட்சி மட்டுமே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி நாட்டில் சமூக நீதியை நிலைநிறுத்தும் ” என்றார்.

* பிப்.19ல் அமேதியில் ராகுல் யாத்திரை
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணம் வரும் 19ம் தேதி அமேதியை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 19ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் ராம்பூர் தொகுதியின் அத்தேஹாவில் தொடங்கும் யாத்திரை கக்வாவில் நுழைந்து ரேபரேலிக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிரதமர் மோடி ஓ.பி.சி இல்லை: ராகுல் காந்தி கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Modi ,Rahul Gandhi ,Jarsukuda ,Former ,Congress ,President ,Indian Unity Justice Pilgrimage ,Odisha ,Dinakaran ,
× RELATED பிரதமர் நரேந்திர மோடியின் குற்றத்தை...