×

சென்னை – பெங்களூரு விரைவுச்சாலை பணிகள் எப்போது நிறைவடையும்? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி

புதுடெல்லி: மக்களவையில் மத்திய சென்னை திமுக எம்.பி தயாநிதி மாறன் எழுப்பிய கேள்வி கள் விவரம்:
* 18 மாதங்களில் நிறைவடையும் என்று சொன்ன சென்னை பெங்களூரு இடையேயான பசுமைவழி விரைவுச்சாலையின் தற்போதைய நிலை என்ன?
* கடந்த 5 ஆண்டுகளாக ஒன்றிய நெடுஞ்சாலைத்துறையிடம் நான் பலமுறை கேள்வி எழுப்பிய சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைப் பணிகள், குறிப்பாக சென்னை முதல் ராணிப்பேட்டை வரையிலான சாலைப் பணிகள் ஒப்பந்ததாரர்களின் மேம்போக்கான நடவடிக்கைகளால் மந்தமான நிலையிலேயே நடைபெற்று வருகிறது. இதனால் அந்த சாலைகளில் பயணம் செய்யும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கின்றனர். இந்த சென்னை – ராணிப்பேட்டை நெடுஞ்சாலைப் பணிகள் எப்போது நிறைவடையும்?
* சமீபத்திய புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலைகள் எப்போது சீரமைக்கப்படும் எனக் கேள்வி எழுப்பினார்.

* டிசம்பரில் முடிக்க நடவடிக்கை
ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரி அளித்த பதிலில்,’ சென்னை-பெங்களூரூ சாலையை வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் 2 மணி நேரத்தில் அங்கு செல்ல முடியும்’ என்றார்.

The post சென்னை – பெங்களூரு விரைவுச்சாலை பணிகள் எப்போது நிறைவடையும்? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Chennai-Bengaluru Expressway ,Dayanidhi Maran ,Lok Sabha ,New Delhi ,Central Chennai DMK ,Dayanithi Maran ,Chennai-Bengaluru Greenway Expressway ,Chennai ,Bangalore Expressway ,Dinakaran ,
× RELATED இந்தியாவின் தலை எழுத்தை மாற்ற இந்தியா...