×

அபுதாபி ஓபன் காலிறுதியில் ஆன்ஸ்

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் அபுதாபி ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டித் தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜெபர் தகுதி பெற்றார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் யுஎஸ் ஓபன் முன்னாள் சாம்பியனும், இங்கிலாந்து வீராங்கனையுமான எம்மா ரடுகானுவுடன் (21 வயது, 296வது ரேங்க்) நேற்று மோதிய ஜெபர் (29 வயது, 6வது ரேங்க்) 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வென்றார். மற்றொரு ஆட்டத்தில் பிரேசில் வீராங்கனை ஹதாத் மையா (27வயது, 13வது ரேங்க்) 7-5, 6-7 (1-7), 6-1 என்ற செட்களில் மேக்தா லினெட்டை (31 வயது, 37வது ரேங்க்) வீழ்த்தினார். இன்று நடைபெறும் முதல் காலிறுதியில் ஆன்ஸ் ஜெபர்- ஹதாத் மையா மோதுகின்றனர்.

The post அபுதாபி ஓபன் காலிறுதியில் ஆன்ஸ் appeared first on Dinakaran.

Tags : Abu Dhabi Open quarter-finals ,ABU ,DHABI ,Tunisia ,Anse ,Geber ,Abu Dhabi Open ,United Arab Emirates ,US Open ,Dinakaran ,
× RELATED 2023-ம் ஆண்டில் திருச்சி சாலையில் நடந்த...